கடைசியாக
எப்போது கிடைத்ததென்று
மூளையறைகளை காலிசெய்தும்
கிடைக்கவில்லை
ஸ்பரிசம் பற்றிய ஞாபகம்..
கன்னம் வழித்துமுறிக்கும்
சுருங்கிய விரல்களைப்பார்க்கையில்
வராத ஞாபகத்தை,
காதலுடன் கோர்த்த
விரல்களைக்காண்கையில்
தோன்றாத ஏக்கத்தை,
பிஞ்சுவிரல் பற்றிச்செல்லும்
அன்னையின் விரல்கள்
திறந்து கொணர்ந்தன,
ஞாபகப்பேழையில்
பொக்கிஷமாய் பாதுகாக்கும்,
வீட்டில் அவன் கழித்த கடைசி இரவையும்;
தலை கோதிய அன்னையின் ஸ்பரிசத்தையும்..
தொடுகைக்கான ஏக்கத்தையும் சேர்த்து
துடைத்துக்கொள்ளும்போது
கண்ணீருடன் சொட்டிக்கொண்டிருந்தன,
ரத்தப்பஞ்சு மூட்டையினூடே
அவன் விரல்களும்..
டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு நன்றி.
15 comments:
தொடுதல் பற்றிய உணர்வுக்கவிதை நல்லயிருக்கு.....
அருமை சாரல்,திரும்ப திரும்ப படித்தேன்.
Nice One..
மிக அருமையான கவிதை. கீற்றில் வாசித்து விட்டிருந்தேன். வாழ்த்துக்கள் சாரல்.
அருமையான வரிகள்
வாங்க கருணாகரசு,
ஆசியா,
எல்.கே,
விஜய்,
ராமலஷ்மி..
அனைவருக்கும் நன்றி.
ஸ்பரிச ஞாபகத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் சாரல் !
கவிதை மழையில் நனைந்தேன்.
அருமையான வரிகளுடனான கவிதை..
வாங்க ஹேமா,
நன்றிங்க.
வாங்க தென்றல்,
மிக்க நன்றி.
வாங்க பிரஷா,
நன்றிங்க.
வாங்க சமுத்ரா,
அழகான பேருப்பா உங்களது :-)
வரவுக்கு நன்றி.
நல்லா இருக்குங்க உங்க கவிதை..
வாழ்த்துக்கள்..!
வாங்க ஆனந்தி,
வாசித்தமைக்கு நன்றி.
Post a Comment