எதையாவது எழுத நினைத்து
எதையாவது
கிறுக்கிவைக்கிறேன்..
கண்ணாடித்திரைக்கப்பால்
கண்சிமிட்டும்
கோஹினூரென
கைவரப்பெறாமலே,
சுற்றிச்சுழன்றடிக்கும்
கனவுமண்டலத்தின் பெருவெளியில்
சுதந்திரப்பறவையாய்...
நீந்திச்செல்கிறது ஒரு கவிதை..
சலனமற்றிருந்த மனக்குளத்தில்
அலையெழுப்பிய கல்லால்
வரிசையற்றலையும் எழுத்தெறும்புகள்
கலைந்தோடுவதை
வேடிக்கை பார்த்தபடி..
டிஸ்கி: இந்த கவிதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு நன்றி.
12 comments:
\\ Leave your comment
கவிதை சொன்னவர்கள்.//
ஹை
கமெண்ட் கவிதை
சுதந்திரமாய் ஒரு பறவை
எழுதுது தன் கவிதை.
சாரல் வழக்கம் போல் அருமை.
வாங்க முத்துலெட்சுமி,
கமெண்ட் கவிதைக்கு நன்றி :-))
வாங்க ஆசியா,
நன்றிப்பா..
கிறுக்கினாலும் அழகுக் கவிதை சாரல் !
ரொம்ப அருமையா இருந்துச்சு...
ரொம்ப ரசிச்சேன்
ஆஹா கைவரப்பெறாமல் கைவந்த கவிதை ..
எறும்பாய் ஊறும் வார்த்தைகள் சேர்ந்து தேன் கவிதையில் மூழ்குகிறது
congrats for keetru
வாங்க ஹேமா,
அழகான உங்க பின்னூட்டத்துக்காகவே நெறைய கிறுக்கலாம் போலிருக்கு :-)))
வாங்க ஆமினா,
ரசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க பத்மா,
ரொம்ப நன்றிங்க :-)
கவிதை கைவராத பொழுதுகள் கூட கவிதையாகி விட்டது.. வார்த்தைகளின் கோர்வை ஈர்க்கிறது.
வாங்க பாரத் பாரதி,
வாசித்தமைக்கு நன்றி.
Post a Comment