Pages

Monday, July 25, 2011

நழுவிச்செல்லும் காலம்..


ஆழ்நிலைக்கனவுகளொன்றில்
பிடிமானத்துக்காய்
துழாவிய கைகளில்
சிக்காது விளையாடுகின்றன;
எப்போதோ
நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
நினைவுகள்,
பெருங்கனவின் தணியாவெப்பத்தில்
காலாவதியாகுமுன்
காலம் நகர்த்திச்சென்ற
படகொன்றில்
துடுப்பசைத்துச்செல்கின்றன
தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)

33 comments:

ஹேமா said...

நினைவுகள் துடுப்பசைத்துச் செல்வது அற்புதம்.வாழ்த்துகள் சாரல் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

கருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))

பாச மலர் / Paasa Malar said...

பயணித்துச் செல்லும் நினைவுகளின் ஆராதனை அழகு

மாய உலகம் said...

//துழாவிய கைகளில்
சிக்காது விளையாடுகின்றன;//...excellent
//எப்போதோ
நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த//
கனவுகளில் உள்ள காட்சிகளை வெளிபடுத்தமுடியாமல் தவிப்பவருக்கு விஞ்ஞான ரீதியான கவிதை அற்புதங்க வாழ்த்துக்கள்... really superb

மாய உலகம் said...

நழுவிசெல்லும் காலம் கனவுகளை விட்டு அகலாமல்...கனவுகளில் மட்டும்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

பாசமான உங்க கருத்துக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

ரசிச்சு வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி..

vidivelli said...

துழாவிய கைகளில்
சிக்காது விளையாடுகின்றன;

அருமையான கவிதை..
வாழ்த்துக்கள்..

Unknown said...

கவிதை ஒரு மௌனராகம்

அருமை!
புலவர் சா இராமாநுசம்

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் .
என் தளத்தில் இன்று ஒரு பாடல்
எழுத்துருவில் வெளியாகி இருக்கின்றது
முடிந்தால் அதற்க்கு உங்கள் கருத்தினை
வழங்குங்கள் .மிக்க நன்றி இப் பகிர்வுக்கு....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வல்லமையில் வெளிவந்த.... அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்! :)

M.R said...

நல்ல கவிதை சகோ .அருமை

மாலதி said...

நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
நினைவுகள், ... அருமையான கவிதைக்குநன்றி

vetha (kovaikkavi) said...

''..சிக்காது விளையாடுகின்றன;
எப்போதோ
நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
நினைவுகள்,..''
Nalla vatikal..
Vetha. Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com

ரிஷபன் said...

காலம் நகர்த்திச்சென்ற
படகொன்றில்
துடுப்பசைத்துச்செல்கின்றன
தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..
ஆஹா.. அருமையாய் வந்திருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் சார்

சி.பி.செந்தில்குமார் said...

>>அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

கருவிப்பட்டை இல்லாம கடை காத்தாடுற இந்த நேரத்துல, பின்னூட்டமிட்டு ஆறுதலளிச்சதுக்கு நன்றி :-)))

ஹா ஹா .. திரட்டிகள் இல்லா விட்டல் என்ன , ரெகுலர் வாசகர்கள் வருவார்களே!!!!!!!!!!!

கீதமஞ்சரி said...

ரொம்ப நல்ல வார்த்தையமைப்பு. கனவு கைகூடும் காலத்துக்கான காத்திருப்பு அற்புதம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விடிவெள்ளி,

வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விடிவெள்ளி,

வாசிச்சு கருத்திட்டதுக்கு ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புலவர் ஐயா,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பாளடியாள்,

ரொம்ப அருமையா இருக்குதுப்பா உங்க கவிதைகளெல்லாம்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எம்.ஆர்,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாலதி,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாலதி,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேதா,

வாசிச்சு கருத்திட்டதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

ரசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிபி,

ஹி..ஹி.. ரெகுலர் நண்பர்கள் வருவாங்கதான். ஆனா, புதிய நட்புகளின் கண்ணுல பட கருவிப்பட்டை வேணுமே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதா,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு :-)

Learn said...

அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ்த்தோட்டம்,

வாசிச்சதுக்கு நன்றி.