படம் கொடுத்த இணையத்துக்கு நன்றி..
என் ஒற்றைச் சொல்லொன்று
உரசிப் பார்த்ததால்
கொப்பளித்துத் துப்பிய
உன் ஆழ்மனக் கசடுகளையெல்லாம்
இதழோரம் கசியவிட்ட
தேய்பிறைப் புன்னகை மூலம்;
கழுவிச் சுத்தப் படுத்த முயன்று,
இன்னும் அழுக்காகி நிற்கிறாய்.
மதர்ப்புடன் விளையாடிக் கொண்டிருக்கும்
உன் பேதமை எழுப்பிய
அவநம்பிக்கை அலைகளில்
கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கலந்து
காணாமலே போய்க்கொண்டிருக்கிறாய் நீ
ஆட்டத்திலிருந்து
நீக்கி விட்டதை அறிந்து கொள்ளாமலேயே..
உன் மனப்பூட்டைத்
திறந்த சாவி
இப்போதேனும் கிடைத்ததேயென்ற
பூரிப்புடன்
அகல விரித்த என் கைகளில்
நிரம்பிய.. புத்தம் புதியதோர் உலகத்தின்
நிர்மலமான நீல வானில்
இறக்கையற்றுப் பறக்கிறோம்
நானும்
என் தக்கை மனசும்,
விடுதலையைச் சுவாசித்தபடி..
டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..
10 comments:
நல்ல கவிதை. முடித்த விதம் அழகு. ரசித்தேன். வாழ்த்துகள்!
முடித்த விதம் அருமை
அழகான கவிதையை வல்லமையோடு விட்டுவிடாமல் எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி..
த.ம-1
கொக்கரக்கோ
அருமையான படைப்பு
சிகரமாய் இறுதில் உள்ள ஒரு வார்த்தை
அதிகம் சொல்லிப் போகிறது
நல்ல பகிர்வு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 2
ஒற்றைச் சொல்லால் வேதனைப்பட்ட உறவிற்கு ஒரு புது உலகமே கையில் கிடைத்திருக்கிறது.அருமை சாரல் !
மனப்பூட்டைத் திறக்கச் செய்த சாவியாம் அவ்வொற்றை வார்த்தையை வெளிக்கொணரத் தூண்டியதற்கு ஒரு நன்றியும் தெரிவித்திருக்கலாம், மதர்ப்பு நிறைந்த அந்த மனோபாவத்துக்கு.
அழுத்தங்களால் ஆழத்தில் புதைபட்டிருந்த மனம் இறக்கையின்றிப் பறப்பது அழகு. பாராட்டுகள்.
அருமை கவிதை வாழ்த்துகள்
அருமையான சொல்லாடன் வாழ்த்துகள்
மனசு தக்கையானாலும் பகிர்வு கனமானது..வாழ்த்துகள்
கருத்துரையிட்ட நட்புகள் அனைவருக்கும்,
நன்றிகள்,
நன்றிகள்,
நன்றிகள்,
நன்றிகள்,
நன்றிகள்,
நன்றிகள்,
நன்றிகள்,
நன்றிகள்,
நன்றிகள்,...
:-))
Post a Comment