அலிபாகிலிருந்து சுட்டுட்டு வந்தது..
மதுபானக் கடையினின்றும்
கசிந்த கோடி சூரிய ஒளிவெள்ளம்
குளிப்பாட்டி விட்டது
அருகிருக்கும் கோவிலையும்,
கொஞ்சம்..
போனால் போகிறதென்று.
இருண்டிருந்த கோயிலில்
நிவேதனத்துக்கும் வழியின்றி,
வெகு நாட்களாய்ச்
சோர்ந்தமர்ந்திருந்த கடவுள்,
நிதானம் தப்பிய நிலையிலேனும்
எவரேனும் வருவரோவென்று
விழி பூத்துக் காத்திருக்கிறார்
நம்பிக்கையுடன்..
பரஸ்பரம்
21 comments:
நிதானம் தப்பிய நிலையிலேனும்
எவரேனும் வருவரோவென்று
விழி பூத்துக் காத்திருக்கிறார்
நம்பிக்கையுடன்..
பரஸ்பரம்
குறைகளைச் சொல்லியழ..//
கடவுளுக்கும் பரஸ்பரம் குறைகளை சொல்லியழ ஆள் வேண்டி இருக்கா! நல்ல கற்பனை.
ஆள் அரவம் இன்றி ஒருவேளை சாப்பாட்டுக்கும் வழி இன்றி, விளக்குக்கு எண்ணெய் இல்லாமல் எத்தனை கோவில்கள் இருக்கிறது.
கவிதையின் கருவும் அதைவடித்த
விதமும் அருமை!
புலவர் சா இராமாநுசம்
கவிதை அருமை சாரல்.
கவிதை அருமை சாந்தி.
கடவுள் இப்பிடியாயிட்டாரா....அடக் கடவுளே !
பரஸ்பரம். நல்ல கவிதை சாந்தி.
கோவிலும் சாமியும் பாவப்பட்ட ஜன்மங்களாகிவிட்டார்கள். நல்ல கவிதை சாந்திம்மா.
கவிதை அருமை
நல்ல கவிதை சாரல்...எதார்த்தம்
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
வாங்க கோமதிம்மா,
நீங்க சொன்னது போல்தான் இருக்குதும்மா.. ஏதோ திருவிழாவே நடக்கறது போல் உணர்வைத்தரும் சரவிளக்குகள் மதுபானக்கடைகளை அலங்கரிக்க,.. பக்கத்துலயே இருட்டுல கோயில் இருக்குது.
வாசிச்சதுக்கு நன்றிம்மா.
வாங்க புலவர் ஐயா,
வாசிச்சு கருத்திட்டமைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சிகளும் :-)
வாங்க ஆசியா,
வாசிச்சுக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க.
வாங்க ஹேமா,
பாவங்க.. அவரோட நிலைமை,.. சுத்தமாப் பராமரிச்சு ஒரு விளக்கு ஏத்தி வைக்கணும்ன்னாக்கூட ஆளில்லாத கோயில்கள் எத்தனையோ இருக்குப்பா..
வாங்க ராமலக்ஷ்மி,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..
வாங்க வல்லிம்மா,
வாசிச்சதுக்கு நன்றி வல்லிம்மா,..
வாங்க சசிகலா,
வாசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க பாசமலர்,
வாசிச்சதுக்கு நன்றிங்க..
வாங்க விமலன்,
வாசிச்சதுக்கு நன்றிங்க..
கடவுளையும் தனிமை வாட்டுதா?! ஐயோ பாவம்
வாங்க ராஜி,
வாசிச்சதுக்கு நன்றிங்க..
Post a Comment