இணையத்தில் சுட்ட படம்..
மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன்ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை.
‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும்.
கதகதப்பான கை தேடிப்பற்றிக்கொள்கிறேன்
நடை பழகச்சொல்லித்தந்த
அந்தச் சுட்டு விரலை.
உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த்தருகிறார்..
வாஞ்சையுடன்
ஒரு தலை கோதலை,
என் தகப்பன்..
நண்பனின் தந்தைக்கு
இறுதியாய் விடை கொடுத்து
நான் வீடேகிய அந்த இரவில்..
டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.
