Pages

Thursday, May 3, 2012

சமர்க்களம்..


(இணையத்தில் சுட்ட படம்)
வீடெங்கும்
ஒழுங்கற்றிருப்பதாக நினைத்து
அடுக்கிட முனையும் போதுதான்
பரபரக்க ஆரம்பிக்கிறது அதுவும்.
'நானும்..நானும்..' என்றபடிப் பாய்ந்தோடி வந்து
ஒழுங்குபடுத்திடுவதாய் எண்ணிக்
கலைத்து விடுகிறது
பிஞ்சு விரல்களால்..

குழந்தையின் இடுப்பிலேறிக்கொண்ட
குழந்தைப்பொம்மையை நோக்கியபடி
ஒவ்வொரு பொம்மையும்
விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன
சற்றே பொறாமையுடனும்
மறுபடியும் விளையாட வருவதாய்
வாக்குறுதிகளுடனும்

குதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்
வண்டியிலேறிய ஓடமும்
முன்வினைத்தவத்தால்
தெய்வஸ்பரிசம் பெற்றுப்
புனிதம் பெற்ற சமர்க்களத்தை
ஒழுங்குபடுத்தியதாய் நினைத்து
ஒதுக்கி நிமிர்ந்த பின்னர்
அழகாகவே இருக்கின்றன.
மறுபடியும் இறைந்து கிடக்கும் பொம்மைகளும்
களைத்துறங்கும் குழந்தையும்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

14 comments:

சசிகலா said...

மறுபடியும் இறைந்து கிடக்கும் பொம்மைகளும்களைத்துறங்கும் குழந்தையும்.//அழகான வரிகள் .

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை சாந்தி.

/குதிரைச்சவாரி செய்ய நேர்ந்த யானையும்
வண்டியிலேறிய ஓடமும்/

ரசித்தேன்:)!

பால கணேஷ் said...

இரைந்து கிடக்கும் பொம்மைகளும் களைத்துறங்கும் குழந்தையும்... அப்படி இருந்தால் தானே அழகு... ஒழுங்காய் அடுக்கியிருந்தால் அதை நாம் ரசிப்போமா என்ன..? அழகுணர்ச்சியைத் தூண்டிவிட்டு ரசிக்க வைத்த அற்புதமான கவிதை.

கீதமஞ்சரி said...

முதல் பத்தியின் அழகை சிலாகித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டாம் பத்தி அட போட வைக்க, இறுதிப் பத்தி, இறுக்கி அணைக்கப்பட்ட பொம்மைகளின் இதம் உணர்த்தியது.

கண்ணொற்றிக்கொள்ளும்படியான மணியான கவிதை. பாராட்டுகள் அமைதிச்சாரல்.

ஹேமா said...

குழந்தைகள் உலகத்துக்குள் ஒருமுறை சென்று பொம்மைகள் தொட்டு விளையாடி வந்த சந்தோஷம் சாரல் !

VijiParthiban said...

"குழந்தைப்பொம்மையை நோக்கியபடி
ஒவ்வொரு பொம்மையும்
விடை பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன"

மிகவும் அருமையான வரிகள் அக்கா. superb .............

ரிஷபன் said...

அழகாகவே இருக்கின்றன.
மறுபடியும் இறைந்து கிடக்கும் பொம்மைகளும்
களைத்துறங்கும் குழந்தையும்.

சபாஷ்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகலா,

வாசித்தமைக்கு மிக்க நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

ரொம்ப நன்றிங்க.. ரசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதமஞ்சரி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேம்ஸ்,

ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

மிக்க நன்றிங்க பாராட்டுக்கு :-)