Pages

Monday, October 15, 2012

இடப்பெயர்ச்சி..


இணையத்தில் சுட்ட படம்..
பக்கத்து வீட்டுத் தாத்தா
திரும்பாப்பயணம் புறப்பட்டு விட
சலனமின்றி
இடம் பெயர்ந்தது சாவிக்கொத்து
முன்னுரிமைப்படி..

சாய்வு நாற்காலிக்கு அடுத்த தலைமுறையும்
சொகுசு நாற்காலிக்கு மூன்றாம் தலைமுறையும்
அவசரமாய் அடித்துக்கொண்டு
ஆரவாரமாய் இடம் பெயர
அமைதியாய் நிகழ்ந்ததோர் இடப்பெயர்ச்சி..
துணி மூட்டையுடனும் தட்டுடனும்
திண்ணையில் பாட்டி.

டிஸ்கி: வல்லமையில் வெளியானது.

8 comments:

சசிகலா said...

சாய்வு நாற்காலிக்கு அடுத்த தலைமுறையும்
சொகுசு நாற்காலிக்கு மூன்றாம் தலைமுறையும்....

யதார்த்தமான உண்மை.

வல்லிசிம்ஹன் said...

அட ராமா.எங்க வீட்ல நடந்த கதைதான்:)

ராமலக்ஷ்மி said...

உருக்கமான கவிதை சாந்தி. சொல்லியிருக்கும் விதம் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் உண்மை...

vimalanperali said...

இடப்பெயர்வுகள் இங்கு ,,,,,,,,,,

துளசி கோபால் said...

அடப் பாவமே..........:(

Prem S said...

கலக்கல் கவிதை உண்மை உரைக்கிறது

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி :-)