Pages

Wednesday, February 20, 2013

சிறகுதிர்த்த மின்மினி.. (வல்லமையில் வெளியானது)



இணையத்தில் சுட்ட படம்..
மின்மினி மந்தையினின்று
வழி தப்பிய எரிகல்லொன்று
கவணிடை
எறிகல்லாய்ப்புறப்பட்டது..
வெகுதூரப்பயணமோவென
ஏங்கி வினவிய சகாக்களைப்
புறங்கையால் ஒதுக்கிவிட்டு
உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாகத்துடன்
துள்ளித்துழைந்தது அண்டப்பெருவெளியில்.
இலக்கில்லாப்பயணத்தில்
அதிரும் பிம்பங்களைச் சிதற விட்டபடி
துழாவித்துழாவி உணர்கொம்புகள் நீட்டி
முன்னேறிக்கொண்டுதானிருந்தது அது.
இலக்கில்லா எவரோ.. எதுவோ.. 
ஓர் நாள்
இலக்கினை அடைந்தே தீரவேண்டிய
நியதிக்குட்பட்டு
பூமாதேவியிடம் மயங்கி
முத்தமிட முயன்றதில்
சீறி எரித்தது
லக்ஷ்மண ரேகை..
உதிர்ந்து வீழ்ந்தது மின்மினி
ஆயிரமாயிரம் பரப்பளவில் தன் சிறகுகளை உதிர்த்தபடி..

டிஸ்கி: வல்லமையில் வெளியானது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... ரசித்தேன்...

ராமலக்ஷ்மி said...

சிறகுதிர்த்த மின்மினியின் பயணத்துக்குத் துணைவந்த வார்த்தைகள் கொள்ளை அழகு. மின்னி மறையும் வாழ்வைச் சொல்லும் அருமையான கவிதை.

sury siva said...

உங்கள் பின்னூட்டங்கள் பல படித்திருக்கிறேன் எனினும் இன்று தான் வலைச்சரம் படித்து வந்தேன்.

அமைதிச்சாரல் எனும் பெயருக்கேற்ப அழகான அமைதியான ஆரவாரமில்லாத வர்ணனை.

சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.in
www.subbuthatha.blogspot.in

சாந்தி மாரியப்பன் said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

ரசித்தமைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுப்பு ஐயா,

நாம இதுக்கு முன்னாடியும் சந்திச்ச நினைவு :-)

வாசித்தமைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.