Pages

Monday, July 29, 2013

தூதும்,, சமாதானமும்.

கல்லெறிபட்ட தேன் கூடாய்க்
கலைந்து கிடந்த வீட்டில்
இரு வேறு கட்சிகளாய்ப்
பிரிந்து நின்று
உப்புப் பெறாத விஷயத்துக்காய்,
விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள்
தலைவனும் தலைவியும்.

பறக்கும் தட்டுகளும், கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..

எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல்
மருண்டு நின்றவர்களுக்காய்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட
முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட
தூதுவர்களால்
நிரம்பி வழிந்தது மனக்கருவூலம்
வற்றாத அன்பால்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் மின்னிதழுக்கு நன்றி..

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பலரின் வீட்டிலும் அப்படித்தான்... ஆனால் குழந்தைகள் முன் "போர்" இருக்கக் கூடாது...

கீதமஞ்சரி said...

மனமுறிவையும் மணமுறிவையும் பல நேரங்களில் தடுத்துநிறுத்தும் அசாத்தியத் துணிவு மழலைத்தூதுவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அழகான பகிர்வு. பாராட்டுகள் அமைதிச்சாரல்.

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை, சாந்தி.

sathishsangkavi.blogspot.com said...

நல்லதொரு கவிதை...

ஹேமா said...

சண்டை பிடிக்கிறதைப் பார்த்தால் இந்தா.....இப்பவே எல்லாம் முடிஞ்சுபோச்சு மாதிரி இருக்கும்.அப்புறம்...நல்ல அழகான கவிதை சாரல் !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

மிகச்சரியாச் சொன்னீங்க.

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதமஞ்சரி,

உண்மைதான்.

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசித்தமைக்கு நன்றி.

கீதமஞ்சரி said...

வணக்கம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_26.html

Anonymous said...

''..பறக்கும் தட்டுகளும், கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..''
பிடித்த வரிகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.