Pages

Wednesday, June 1, 2016

விடுமுறைகளுக்கென..

வீட்டுக்குழாயில் வந்து கொண்டிருக்கும் தண்ணீர்
எந்நிமிடத்திலும் நின்றுவிடக்கூடும்
அதற்குள்
துவைக்க
துலக்க
பெருக்கி மெழுகவென  காத்திருக்கும் வேலைகளோடு
அவர்களுக்குரிய கடமைகள் நிறைவேற்றப்படவென
காத்திருக்கின்றன குழந்தைகளும்

சிணுங்கல்களையும் வேண்டுதல்களையும்
சிரத்தையுடன் நிறைவேற்றியபடி
அடுத்து வரும் நொடிகளைத்தின்னும்
வேலைகளின்
பரபரப்போடு நானும்..

ஒத்தாசை இல்லையெனினும் பாதகமில்லை
செய்தித்தாள் கையிறக்கி விட்டு
பரிமாறிக்கொள் உணவை
அன்பு மனைவி அருகிருந்து ஊட்டுவதை
விடுமுறைகளில் வைத்துக்கொள்ளலாம்.

2 comments:

தனிமரம் said...

அங்கலாய்பு அவசர உலகில் நிரந்தரமாகிவிட்டது.

Yaathoramani.blogspot.com said...

புரிந்து கொள்ள முடிந்தது
எளிமையாக எனினும்
வலிமையாகச் சொல்லிப் போனவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்