கோபம் ஏற்படுத்தும்போது
விலகி நடக்கவும்
பிரியத்தைக்கொட்டும்போது
ஏந்திக்கொள்ளவும்
தனிமைத்தவத்தில்
நிச்சலத்துடனிருக்கவும்
மகிழ்வில் ஆர்ப்பரிக்கவும்
பிரிவேற்படும்போது சகித்துக்கொள்ளவுமென
எல்லாம் பழகிக்கொண்டாயிற்று
ஆயினும்,
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அசந்தர்ப்பமாய்
துளிர் விடும் கண்ணீரை
என்ன செய்வதென்றுதான்
இன்னும் பிடிபடவில்லை
போகட்டுமென அதில் கரைந்து விடுவதைத்தவிர..
6 comments:
true
the reason is we are not buddhhas mahavir or ramana maharishi....
அருமையான கவிதை.
உணர்வுப் பூரணமான, மிக அருமையான கவிதை.
ஒரு சின்ன பிழைத் திருத்தம்
நிச்சலத்துடனிருக்கவும் ==> நிச்சலனத்துடனிருக்கவும் !
வாழ்த்துகள்!
வாங்க சந்திரகுமார்,
நிச்சலம் எனில் அசைவின்மை, உறுதி, நித்தம், நித்தியத்துவம், முழுப்பட்டினி எனப் பல பொருள் உண்டு என அகராதி சொல்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
மிக்க நன்றி.
வாங்க சந்தர்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment