சுயம் தொலைத்து
நான் மீண்டபின்னும்;
இன்னும்,
அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறாய்...
விலகி ஓட முயன்று
தோற்றுத்திரும்பி;
காலடியிலேயே
வந்து சுருண்டு கொள்கிறாய்;
விசுவாசமான நாய்க்குட்டியைப்போல்...
தொடர்ந்துதான் வருகிறாயென்று
தொடர்ந்து, நடந்தால்
திடீரென்று காணாமல் போகிறாய்!!!
எதிர்பாரா நேரம் எதிரே வந்து
கண்ணாமூச்சி காட்டுகிறாய்.
உன் நண்பன் நானென்று
கைகோத்து வந்துவிட்டு;
சொல்லாமல் கொள்ளாமல்
போவதை,
என்ன பெயரிட்டு அழைக்க!!!
நீ நிழலா??? ..மனமா???..
8 comments:
இரண்டுமே பொருந்துவது போலத்தான் தெரியுதுங்க.... கவிதை நல்லாயிருக்குங்க. பாராட்டுக்கள்.
வாங்க கருணாகரசு,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அழகாய் வார்த்தைகள் தொடுத்து கவிதையாய் அருமை வாழ்த்துக்கள் 1
வாங்க பனித்துளி சங்கர்,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
அருமை
வாங்க உழவன்,
நன்றி.
கேள்வி கவிதைக்குள் நிழலாடுகிறது...! அருமை!
வாங்க கவிதன்,
ரசிப்புக்கும் முதல்வரவுக்கும் நன்றி.
Post a Comment