இறைந்து கிடப்பவற்றில்
எனக்கான வார்த்தைகளை
தேர்ந்தெடுப்பதிலேயே;
என் ஜென்மம் கழிந்துவிடுகிறது.
தேனும் விஷமும்
தடவப்பட்ட அம்புகளாய்,
வார்த்தைகள்
வந்து விழும்போது;
தேனென்று நம்பி
தேர்ந்தெடுப்பவையெல்லாம்,
விஷக்கொடுக்கையும்
ஏன் சேர்த்து சுமக்கின்றன?.
ஆச்சரியம்தான்;
வார்த்தைகள் ஏற்படுத்திய
காயங்களுக்கு,
அதே வார்த்தைகளே
மருந்தாகின்றன.
ஏற்படுத்திய வலி,
அவற்றுக்குத்தான்
இன்னும் புரியவில்லை.
துப்பப்பட்டவற்றைவிட
மென்று விழுங்கப்பட்ட
வார்த்தைகளுக்குத்தான்
வீரியம் அதிகமாம்.
என்றாலும்;
விஷம் சுமக்கும் நாவை மட்டும்,
எந்த மகுடியாலும் அடக்கமுடிவதில்லை.
14 comments:
நல்ல கவிதை சாரல்.
//எந்த மகுடியாலும் அடக்கமுடிவதில்லை.//
உண்மை. அடங்காத இவை குறித்த பதியாத என் கவிதை வருகிறது நினைவுக்கு. பகிர்கிறேன் விரைவில்.
நல்லாருக்கு..அமைதிச்சாரல்..
/மென்று விழுங்கப்பட்ட
வார்த்தைகளுக்குத்தான்
வீரியம் அதிகமாம்./
செம!
நல்ல கருத்து. வாழ்த்துகள் மேலும் எழுதுங்கள் அமைதிசாரல்.
வாங்க ராமலஷ்மி,
ஆஹா!!.. கரும்பு தின்னக்கூலியா?..
உங்க கவிதைக்காக காத்திருக்கிறேன். விரைவில் பதியுங்கள்.
நன்றி.
வாங்க சந்தனமுல்லை,
நன்றிப்பா.
வாங்க உயிரோடை,
முதல் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.
//துப்பப்பட்டவற்றைவிட
மென்று விழுங்கப்பட்ட
வார்த்தைகளுக்குத்தான்
வீரியம் அதிகமாம்//
Well said. Once said never could be taken back. Hard part is it stays in our heart until last journey
வாங்க அப்பாவி,
புரிதலுக்கு நன்றிங்க. மத்தவங்க காயப்படக்கூடாதுன்னு நாம ஊமைகளாகிடறோம். ஆனா, சொல்ல வேண்டியது நம்ம மனசுல சத்தம் போட்டுக்கிட்டேதான் இருக்கும்.
நம்ம மனசுல சத்தம் போட்டுக்கிட்டேதான் இருக்கும்.//
superu
வாங்க எல்.கே,
நன்றிப்பா.
வாங்க முத்துலெட்சுமி,
நன்றிங்க.
//விஷம் சுமக்கும் நாவை மட்டும்,
எந்த மகுடியாலும் அடக்கமுடிவதில்லை.//
உண்மை..
வாங்க வைகறை நிலா,
ஆமாம்ப்பா.. நாகாக்க அப்படீன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.
நன்றி.
Post a Comment