சிக்கித்தவிக்கும் நினைவுகள்
மனதின் இடுக்குகளில்,
பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்;
எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு.
இனம்புரியா சஞ்சலங்கள்,
விடாது பின்வரும் நிழலைப்போல்
கேள்விகள்,
துரத்திக்கொண்டிருக்கும்;
இன்னவென்று புரிபடாத பதில்களை..
புரிந்துகொள்வதற்கும்
புரியவைப்பதற்குமான இடைவெளியில்,
நூலாம்படையுடன் காலம்..
விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.
கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..
டிஸ்கி: இந்தக்கவிதை திண்ணையில் வெளிவந்துள்ளது..
மனதின் இடுக்குகளில்,
பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்;
எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு.
இனம்புரியா சஞ்சலங்கள்,
விடாது பின்வரும் நிழலைப்போல்
கேள்விகள்,
துரத்திக்கொண்டிருக்கும்;
இன்னவென்று புரிபடாத பதில்களை..
புரிந்துகொள்வதற்கும்
புரியவைப்பதற்குமான இடைவெளியில்,
நூலாம்படையுடன் காலம்..
விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.
கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..
டிஸ்கி: இந்தக்கவிதை திண்ணையில் வெளிவந்துள்ளது..
21 comments:
தீர்வு நல்லா இருக்கு
நல்லாயிருக்குங்க.....வாழ்த்துக்கள்.
//கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..//
சூப்பர்ப்
வாழ்த்துகள் சகோ!
அருமையான கவிதை அமைதிச்சாரல்.
//கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..//
தீர்வில் பிறந்த தெளிவு அழகு.
வாழ்த்துக்கள்
கவிதை ரொம்ப நல்லாருக்கு அமைதிக்கா..
///கனவுக்கும் நனவுக்குமான போராட்டத்தில்
கனவில் கிடைத்த தீர்வில்,
கழுவி விடப்பட்ட வானமாய்
மனம்..///
சூப்பர் வரிகள். நல்வாழ்த்துக்கள்.
சிலசமயங்களில் கனவில் தீர்வு கிடைப்பது உண்மைதான் சாரல் !
அருமையான தீர்வு சாரல்!
தீர்வுகள் கனவில்தான் கிடைக்கின்றன.
நனவு வாய்தா வாங்கிக்கொண்டேயிருக்கிறது.
புரிந்துகொள்வதற்கும்
புரியவைப்பதற்குமான இடைவெளியில்,
நூலாம்படையுடன் காலம்..
விழுங்கக்காத்திருக்கும் வாய்பிளந்த சிலந்தியென.
ஆஹா!
வாங்க எல்.கே,
தீர்வு பிடிச்சிருக்கா :-))))
நன்றி.
வாங்க நி.சி.முத்து,
நன்றிங்க..
வாங்க வசந்த்,
நன்றிங்க..
வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க..
வாங்க KANA VARO,
வாழ்த்துக்களுக்கு நன்றி..
வாங்க நசரேயன்,
நன்றி..
வாங்க ஸ்டார்ஜன்,
தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது கூட கனவில் வந்த ஐடியாவால்தானாம் :-)
நன்றி..
வாங்க ஹேமா,
கரெக்ட்டுப்பா.. அறிவியல்லயே நிறைய உதாரணங்கள் இருக்கு. உதாரணமா,.. molecular structure of benzene.
வாழ்க்கைக்கான தீர்வுகளும்கூட சிலசமயங்களில் கிடைக்கத்தான் செய்யுது..
நன்றி.
வாங்க சுந்தரா,
நன்றிங்க.
வாங்க நானானிம்மா,
நன்றிம்மா..
வாங்க ரிஷபன்,
நன்றிங்க..
Post a Comment