கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று..
*************************
எந்தவொருஇசைக்கருவியையும்விட
இனிமையாகவே ஒலிக்கிறது,
'அம்மா' என்ற
மழலைச்சொல்...
*****************************
*****************************
நிரம்பியபடியே இருக்கிறது
ஒவ்வொரு துளிகளாய்
என்றாலும்;
சொந்தமில்லாதவற்றை
உமிழ்ந்துவிடும்
கடலாய்,
ஒதுக்கியபடியே இருக்கிறது மனம்,
ஒவ்வொன்றாக.. கசடெனக்கருதி;
சஞ்சலங்களையும் தடுமாற்றங்களையும்.
சோதனைகளை
உரமாய்க்கொண்டு
உருவாகின்றன நம்பிக்கைகள்..
சிப்பிக்குள் முத்தென.
