Pages

Wednesday, December 8, 2010

விஷவிருட்சம்...


கூரையில் விழுந்த
சிறுபொறியொன்று,
விழுங்கிடத்துடிக்கும் பெருநெருப்பாகி,
தீவிரவாதமென்ற பேர்கொண்டதுவோ??
புரையோடிப்போனதை
பூச்சிட்டு அழிக்காமல்,
எம்மக்கள் வாளாவிருப்பதுவோ!!
சோதரர்களிடையே
பிரிவினை கண்டு
துடித்திடாத தாய்,
இன்னும் பிறந்திடவில்லை.
குறைவிலா வேதனைகள்
சுமந்துதிரியும்,.. ஒவ்வொரு மனங்களிலும்,
வாழ்வே சுமையாகிப்போன
ரணமொன்றுண்டு, உதிரம் கசிந்தபடி..
வேருடன் கல்லாது 
செந்நீரூற்றி வளர்த்த விஷ விருட்சத்தில், 
கிளைத்துக்கனிந்து காத்திருக்கிறான்
சாத்தானொருவன்
மனிதனென்றழைத்துக்கொள்பவர்களால்
புசிக்கப்படவென..
ஆயுதமாய் மனிதனே மாறிப்போனபின்
தக்கவைத்துக்கொள்வோம்
மனிதத்தை.... 
அழியும்முன்.
காட்சிப்படுத்திடவென்றல்லாமல்
சுவாசமாய்.. உயிர்மூச்சாய்!!.






12 comments:

எல் கே said...

நேற்றைய வெடிகுண்டு சம்பவத்திற்கு பிறகு எழுதியதா ??? வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது சகோ..

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் சாரல். நல்ல கவிதை.

KANA VARO said...

கவிதையும் படத்தெரிவும் அருமை.

சந்தனமுல்லை said...

:-((

கவிதை வழக்கம்போல மனதைத் தொடுகிறது.

சுந்தரா said...

இன்ற்றையநிலைமைக்குப் பொருத்தமான கவிதை சாரல்!

ஹேமா said...

சாரல்...உங்கள் ஆதங்கம் அத்தனை வரிகளிலும்.காலம் கரடுமுரடாகவே நகர்கிறது.பயமாகவே இருக்கிறது !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

ரொம்பவே ஆதங்கமா இருக்குப்பா.. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா???

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க KANA VARO,

ரொம்ப நேரம் தேடவேண்டியில்லாம சீக்கிரமே கிடைச்சுடுச்சு.. தலைப்பு அப்படி :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

டிசம்பர்-6ன் பதட்டம் தீர்றதுக்குள்ள இப்படி ஒரு சம்பவம் :-(

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

அடுத்த தலைமுறையை நினைச்சா கவலையாருக்கு..

நன்றி..