நூலறுந்த பட்டமாய்
உயரப்பறக்கும் கற்பனைகளுடன்
எழுதிச்செல்கிறது
கவிதையொன்று.. தன்னைத்தானே;
ஊர்ந்து செல்லும் எழுத்தெறும்புகள் ..
சுமந்து செல்லும்,
கொஞ்சம் கனவுகளையும்
ஓய்வெடுத்துச்செல்லும்
சில வண்ணத்துப்பூச்சிகளையும்..
ஒருசில நெருப்பூக்களையும்.
சிலசமயங்களில்
கவிதைகளாகவே இருக்கின்றன;
போகிறபோக்கில் குழந்தை
சிந்திச்செல்லும் புன்னகைகளும் ..
அள்ளிச்சேர்த்தபின்னும்
மீதமிருக்கும்
மழைமுத்துக்களாய்..
பிரபஞ்சமெங்கும்
நிரம்பிச்சொரிந்துகொண்டே
இருக்கின்றன கவிதைகள்..
14 comments:
//அள்ளிச்சேர்த்தபின்னும்
மீதமிருக்கும்
மழைமுத்துக்களாய்..
பிரபஞ்சமெங்கும்
நிரம்பிச்சொரிந்துகொண்டே
இருக்கின்றன கவிதைகள்..//
உண்மைதான். இந்த மழை முத்தினை ரசித்தேன். அருமை சாரல்.
அருமை சகோ. இப்ப என்ன வரிசையா கவிதையா வருது
வாங்க ராமலஷ்மி,
எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு கவிதை ஒளிந்துகொண்டிருக்கிறது போலிருக்கு :-)))
ரசிச்சதுக்கு நன்றி..
வாங்க எல்.கே,
உணர்ந்ததை இப்படித்தான் சுலபமா சொல்லமுடியுது. விஸ்தாரமா விவரிச்சு எழுதறதைவிட சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் ரொம்ப பிடிச்சிருக்கு அவ்ளோதான் :-))
இன்னிக்கு ஒரு புது இடுகையும் போட்டிருக்கேனே.. பார்க்கலையா ???
நன்றி..
ரொம்ப அழகான வரிகள்.... வார்த்தைத் தெரிவுகள்....
அதைவிட நான் ரசித்தது தெளிவான அந்த ஃப்ளோ..
வாழ்த்துக்கள்... உங்களைத் தொடர்கிறேன்...
//போகிறபோக்கில் குழந்தை
சிந்திச்செல்லும் புன்னகைகளும் ..
அள்ளிச்சேர்த்தபின்னும்
மீதமிருக்கும்
மழைமுத்துக்களாய்..
பிரபஞ்சமெங்கும்
நிரம்பிச்சொரிந்துகொண்டே
இருக்கின்றன கவிதைகள்..//
அருமையான வரிகள்...
சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
பிரபஞ்சமெங்கும்
நிரம்பிச்சொரிந்துகொண்டே
இருக்கின்றன கவிதைகள்..///
உண்மைதான்.ரசித்தேன்.அருமை சகோ.
ரொம்ப அழகா இருக்குங்க
அருமையான வரிகள் அமைதிச்சாரல்.
வாங்க பிரபு,
ரசிச்சதுக்கும், தொடர்வதற்கும் நன்றி..
வாங்க மாணவன்,
நன்றிங்க..
வாங்க கல்பனா,
நன்றிங்க..
வாங்க பத்மா,
நன்றிங்க..
வாங்க ஸாதிகா,
நன்றிங்க..
Post a Comment