கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று..
*************************
எந்தவொருஇசைக்கருவியையும்விட
இனிமையாகவே ஒலிக்கிறது,
'அம்மா' என்ற
மழலைச்சொல்...
*****************************
*****************************
நிரம்பியபடியே இருக்கிறது
ஒவ்வொரு துளிகளாய்
என்றாலும்;
சொந்தமில்லாதவற்றை
உமிழ்ந்துவிடும்
கடலாய்,
ஒதுக்கியபடியே இருக்கிறது மனம்,
ஒவ்வொன்றாக.. கசடெனக்கருதி;
சஞ்சலங்களையும் தடுமாற்றங்களையும்.
சோதனைகளை
உரமாய்க்கொண்டு
உருவாகின்றன நம்பிக்கைகள்..
சிப்பிக்குள் முத்தென.
25 comments:
மூன்றுமே முத்துக்கள்
நான் என்ன சொல்ல வந்தேனோ அதுவே முதல் பின்னூட்டமாக..!
வாழ்த்துக்கள் சாரல்!
அருமையான கவிதைகள்.
3 கவிதைகளும் அருமைங்க!!!
நல்லாருக்குங்க.
மூன்றும் அருமை
வாங்க வேலுஜி,
நன்றிங்க.
வாங்க ராமலஷ்மி,
ரொம்ப நன்றிங்க..
வாங்க ஆசியா,
நன்றி.
வாங்க ஆமினா,
நன்றி.
வாங்க சரவணக்குமார்,
நன்றி..
வாங்க எல்.கே,
நன்றி.
முத்தான மூன்று...
அருமையா இருக்குங்க ......
மூன்றும் அருமை! மூன்றாவது மனதை நெருடி...வருடுகிறது!!
மூன்றுமே நல்ல சிந்தனை சாரல் !
வாங்க அரசன்,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க நானானிம்மா,
ரொம்ப நன்றிம்மா..
வாங்க ஹேமா,
ரொம்ப நன்றி..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
எந்தவொரு
இசைக்கருவியையும்விட
இனிமையாகவே ஒலிக்கிறது,
'அம்மா' என்ற
மழலைச்சொல்.../////
superb :)
அருமையான கவிதைகள்.
பற்று பற்றியே அறுக..
///ஒதுக்கியபடியே இருக்கிறது மனம்,
ஒவ்வொன்றாக.. கசடெனக்கருதி;
சஞ்சலங்களையும் தடுமாற்றங்களையும். ///
இதை செய்வதில் தான்... எத்தனை கஷ்டம்....
ஹ்ம்ம்.. இருந்தாலும் தொடர் முயற்சி... ;-) பண்ண வேண்டியது தான்..
நல்லா இருக்குங்க... நன்றி :-)
மூன்று கவிதையும் மூன்று ரகமா நல்லா இருக்குங்க.. :-)
Post a Comment