முற்றத்துத்தூணில் சாய்ந்துகொண்டுதான்
கீரை ஆய்வாள்,
பொன்னம்மாச்சி..
வெயில் காயும் நெல்லில் சிறிதில்
பசியாறும் புறாவுக்கு,
முற்றத்து தொட்டியில்
தண்ணீரும் கிடைக்கும்.. அவள் புண்ணியத்தில்.
அவளமைத்த
கலயவீடுகளில்
நிம்மதியாய் குடும்பம் நடத்துகிறது குருவி
நன்றி சொல்லியபடி..
பேச்சும் சிரிப்புமென
தோழிகளில் ஒருவராகிப்போன
அந்த முற்றத்தில்தான்
பொரணியும் ஆவலாதியும்
சேர்ந்தரைபடும் அரிசியுடன்..
கானகமும் இல்லமுமாய்
அனைவரும் போய்ச்சேர்ந்தபின்..
வெயிலாடிக்கொண்டிருக்கிறது
துவைத்த கல்லும், வளர்த்த முருங்கையும்;
காலியான முற்றத்தில்...
டிஸ்கி: வெளியிட்ட வார்ப்புக்கு நன்றி..
23 comments:
அருமையான கவிதை.
காட்சிகளும் கண்முன்னே விரிகின்றன.
வார்ப்புக்கு வாழ்த்துக்கள் சாரல்:)!
ரொம்ப நல்லாயிருக்குங்க.. முற்றம் சொல்லும் சேதிகள் அதிகம்.. காலியான முற்றத்தில் கொஞ்சம் ஈரம் இக்கவிதை.. வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை..:)
நினைவுகள் மலரும் வெறிச்சோடிய முற்றத்தில்.
அருமையான கவிதை.
அருமையான கவிதை!!!!
கவிதை அருமை
வண்ணதாசன் வரிக்கு வரி எட்டிப்பார்த்தாலும், கவிதை அழகாகவே கதையாடுகிறது, முற்றத்துடன்.
இப்போதெல்லாம் முற்றமில்லா அடுக்குமாடி வீடுகள் நடுவில் முற்றம்போல இந்தக் கவிதை.வாழ்த்துகள் சாரல் !
கிராமியமணம் கவிதையில் கமகமக்கின்றது.அருமை.
வாங்க ராமலஷ்மி,
சிறுவயதில் கொஞ்சநாள் வசிக்க நேர்ந்த சூழல்ங்க அது. மனசுல அப்படியே பதிஞ்சுருக்கு..
நன்றி.
வாங்க பாலாசி,
சொன்னவை கொஞ்சம்தான், முற்றத்தில் இன்னும் நிறைய சேதிகள் கொட்டிக்கிடக்கு..
நன்றி.
வாங்க இர்ஷாத்,
நன்றி.
வாங்க அம்பிகா,
நன்றிங்க..
வாங்க ஆமினா,
நன்றிங்க..
வாங்க கல்பனா,
நன்றி.
வாங்க இசை,
வண்ணதாசன் ரேஞ்சுக்கு என் கவிதையை ஒப்பிடுவது ரொம்பவே அதிகம் :-)))))))
உங்களுக்கு கவிதை பிடித்திருந்ததில் எனக்கும் சந்தோஷம் :-)
நன்றி.
வாங்க ஹேமா,
முற்றம் இல்லாத குறையை அடுக்குமாடி வீடுகளின் பால்கனி தீர்த்துவைக்குதுப்பா :-)))
நன்றி.
வாங்க ஸாதிகா,
நன்றிங்க..
பூங்கொத்து!!!
வாங்க அருணா மேடம்,
பூங்கொத்துக்கு நன்றி..
அருமை.
"வெயில் காயும் நெல்லில் கொத்தித்தின்னும்.. புறா,உமிக்குருவி, மைனாக்கள்...கோழிகள்...என சிறுவயதுக் காட்சிகள் ஓடுகின்றன.
வாங்க மாதேவி,
எனக்கும் அதே நிலைதான் :-)))))
வருகைக்கு நன்றி.
unkal pukaippadankalaip poalavae kavithaikalum kaalaththai niruththi vidalaam endra nambikkaiyil thavikkindrana..inthak kavaithaiyum athil saerththi...
Post a Comment