(படத்துக்கு நன்றி.. இணையம்)
உனதும் எனதுமாய்பிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,
நமதானபோது
பிரிவென்னும் சுனாமி
புரட்டிப்போட்டது நம்மை..
ஓருயிராயிருந்த
ஈருடலிலொன்று..
விட்டுச்சென்ற வெறுங்கூட்டில்,
சடசடத்தடங்கும்
எண்ணப்பறவைகளின் சிறகுகள்
வருடிக்கொடுக்கின்றன
குருதியொழுகும் நினைவுத்தழும்புகளை..
வண்ணமிகு எனதுலகின்
அத்துணை ஜன்னல்களிலும்,
இருட்டின் வாசம் வீசவிட்டு,..
உன்னில் நானடக்கமென்பதை
சொல்லாமல் சொல்கிறதடா நம்பெயர்
என்று,
இன்னொரு கத்தியை செருகிச்செல்கிறாய்
காயத்துக்கு மருந்தாக..
நாளை வரை காத்திருக்க
நானொன்றும் ராமனல்ல;
வந்துவிடு சீக்கிரம்...
டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)
22 comments:
விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா என
கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில்
சொல்லிச் செல்வதைப்போல
காயம் உண்டாக்கியவளையே
மருந்திடவும் உடன் வரச் சொல்லும்
தங்கள் கவிதை மிக மிக அருமை
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
அசத்தல் கவிதை...
இன்னொரு கத்தியை செருகிச்செல்கிறாய்
காயத்துக்கு மருந்தாக..
நாளை வரை காத்திருக்க
நானொன்றும் ராமனல்ல;
தங்கள் கவிதை மிக மிக அருமை
மனதில் அடிக்குமேல் அடி விழுந்த வலியின் வரிகள்.வலிகூட வார்த்தைகளை வசப்படுத்தியிருக்கிறது சாரல் !
//இன்னொரு கத்தியை செருகிச்செல்கிறாய்
காயத்துக்கு மருந்தாக..//
அடடா. அருமை வரிகள். மனமிரங்கி வந்து விடட்டும் சீக்கிரம்.
நல்ல கவிதை சாரல்:)!
நல்லா இருக்குங்க... இன்னொரு கத்தி சொருகுதல் காயத்திற்கு மருந்து... அடாடா... ;-)
உனதும் எனதுமாய்
பிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,
நமதானபோது
பிரிவென்னும் சுனாமி
புரட்டிப்போட்டது நம்மை..
அழகான கருத்து நிறைந்த கவிதை
வாழ்த்துக்கள்...
உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது சகோ
சகோ உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
எனது பக்கம்....
http://sempakam.blogspot.com/
வாங்க ரமணி,
வருகைக்கும் வாசித்தமைக்கும் நன்றி..
வாங்க சௌந்தர்,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா :-)
கவிதை நன்றாக இருக்கிறது... வாழ்த்துக்கள்!
வாங்க மாலதி,
வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..
வாங்க ஹேமா,
காதல்ல உடையாத மனசு எங்க இருக்கு :-))))
வாங்க ராமலஷ்மி,
எச்சரிக்கை கொடுத்தப்புறமும் வராம இருப்பாங்களா என்ன :-))
வாங்க ஆர்.வி.எஸ்,
வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோலன்னும் சொல்லிக்கலாம் :-))
வாங்க கவி அழகன்,
வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.
வாங்க விடிவெள்ளி,
உங்க தளத்துக்கும் போய்வந்தேன்ப்பா.. அருமையாயிருக்கு..இனிமே, நிச்சயமா அடிக்கடி வருவேன்.
வாங்க ப்ரியா,
வாசிச்சதுக்கு நன்றிப்பா..
வந்துவிட்டேன் சீக்கிரம்....
//எண்ணப்பறவைகளின் சிறகுகள்
வருடிக்கொடுக்கின்றன
குருதியொழுகும் நினைவுத்தழும்புகளை..//
கவிதை ஜாலங்கள்... ப்பா...சான்சே இல்ல பின்றீங்க.... ச்சோ ச்ச்வீட்ட்
வாங்க மாய உலகம்,
ரசிச்சு வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)
சடசடத்தடங்கும்
எண்ணப்பறவைகளின் சிறகுகள்
வருடிக்கொடுக்கின்றன
குருதியொழுகும் நினைவுத்தழும்புகளை..
வரிசையாய் 3 கவிதைகளும் மனதில் பதிகிற ரகமாய்.. அற்புத வரிகள்..
வாங்க ரிஷபன்,
ரசிச்சு வாசிச்சதுக்கு நன்றி.
Post a Comment