என்னோட காமிராவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்
மனிதம் விற்று நடத்திய
சுயநல வியாபாரத்தில்
மிஞ்சியவை
மனிதனின் கணக்கில் லாபமாகவும்
இயற்கையின் கணக்கில் நட்டமாகவும்
வரவு வைக்கப்பட்டு விட.
கதிர்வீச்சு அழித்திட்ட
எங்கள் குழந்தைகளின் நினைவுகளைச்
சுமந்து கொண்டு..
சோலைகளிலும் வீட்டு முற்றங்களிலும்
சோலைகளிலும் வீட்டு முற்றங்களிலும்
விட்டு விடுதலையாய்த்திரிந்த
நாட்களை அசை போட்டபடி
அலைந்து திரிகின்றோம் அங்குமிங்கும்
பகடைகளாய்,
நீங்கள் ஆடும் சதுரங்கத்தில்..
சொந்த மண்ணிலேயே அகதிகளான
எங்கள் அபயக்குரல்கள்
எதிரொலிக்க வழியின்றி
என் அலகினுள்ளேயே
உங்கள் செவிகளை எட்டாவண்ணம்.
உறைந்து போய் விட
எங்களுக்கான வாழ்வாதாரங்கள்
கலைக்கப்பட்டு விட்ட பின்னும்
பிழைத்துக் கிடக்கிறோம்
ஒரு பிடி உணவிலும் ஒரு துளித் தண்ணீரிலும்
பச்சையம் மறந்த
இரும்புக்கிளைகளிலுமாக..
டிஸ்கி: குருவிகள் தினத்திற்காக வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.
8 comments:
மனதை அசைக்கிறது குருவிகளின் பகிர்வு.
நல்ல கவிதை சாந்தி!
நல்ல் கவிதை.வாழ்த்துக்கள்.கிட்டத்தட்ட அழிந்து போன ஒரு இனத்திற்காக எழுகிற குரல்,சந்தோசமாயிருக்கிறது,வாழ்த்துக்கள்.
குருவிகளின் குரலாய் ஒலித்த கவிதை மனதில் பதிந்தது. அருமை!
குருவிகள் பாவம்....கவிதை நன்று சாரல்..
பச்சையம் மறந்த
இரும்புக்கிளைகளிலேயே அடங்கிவிட்ட அலகுகளின் கீச்சுக்கள்.அழகுக் கவிதை சாரல் !
பிழைத்துக் கிடக்கிறோம்ஒரு பிடி உணவிலும் ஒரு துளித் தண்ணீரிலும்பச்சையம் மறந்த இரும்புக்கிளைகளிலுமாக..
sabaash !
கவிதையின் கனமும் நிதர்சனமும் மனம் அசைக்கிறது. வாழ்வாதாரமற்ற நிலையிலும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி நிற்கும் குச்சிக்கால்கள். படம் மனதை கொள்ளை கொள்கிறது. பாராட்டுகள்.
குருவிகளின் பாடல் விடுதலை தேடிய எம் ஈழப்பறவைகளின் வலிகளையும் சேர்த்தே சொல்வதாய் படுகிறது.நாமும் குருவிகளும் ஒன்றே. கலைக்க கலைக்க இடம்மாறி இடம் மாறி நாடெங்கும் கூடு கட்டுகின்றோம்...நாளைய நம்பிக்கைகளோடு.
Post a Comment